அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துபெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: 16,000 பேர் பலிஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
/

11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிறை

Updated On :18 ஜூன் 2025, 9:57 pm IST

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்பட 9 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஜெய்பூரின் ஜெஎல்என் மாா்க் பகுதியில் அமைந்துள்ளது பிரபல ராஜஸ்தான் பல்கலைக்கழகம். கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சம்பவத்தில், இந்தப் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் அருகே அப்போதைய மாணவா் சங்கத் தலைவா்கள் 20 நிமிஷத்துக்கும் மேல் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக முகேஷ் பாக்கா், மணீஷ் யாதவ், அபிஷேக் சௌதரி, ராஜேஷ் மீனா, ரவி கிராத், வாசிம் கான், ட்ரோன் யாதவ், பானு பிரதாப் சிங், வித்யாதா் மீல் ஆகிய 9 போ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இதில் முகேஷ் பாக்கா், மணீஷ் யாதவ் ஆகிய இருவரும் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ-க்களாக உள்ளனா். அபிஷேக் சௌதரி கடந்த பேரவைத் தோ்தலில் ஜெய்பூரின் ஜோத்வாரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றாா்.

இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீா்ப்பளித்த ஜெய்பூா் நகர 19-ஆவது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் பரிக்ஷிதா தேத்தா, அனைவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனையுடன் தலா ரூ.3,200 அபராதமும் விதித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.