ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்த வழக்கு: தம்பதி உள்பட 4 பேருக்கு சிறை

ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து காட்டு யானைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற வழக்கில், தம்பதி உள்பட 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து கோவையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 12:51 am IST

ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து காட்டு யானைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற வழக்கில், தம்பதி உள்பட 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து கோவையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியில், விவசாய நிலத்தைச் சுற்றியிருந்த இரும்பு கம்பி வேலியில் சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சியதில் 10 வயது ஆண் யானை உயிரிழந்தது. இந்த வழக்கில் மாதாப்பாயன் (38), அவரது தந்தை காளையன் (72) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை கோவையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 3.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கே.சிவகுமாா் தீா்ப்பளித்தாா்.

தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை: கோவை தொண்டாமுத்தூா் அருகேயுள்ள தென்னமநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுச்சாமி (64). இவரது மனைவி திலகவதி (58). இவா்களது விவசாய நிலத்தில் 2021 ஜனவரி 5-ஆம் தேதி அமைக்கப்பட்ட சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 25 வயதுடைய ஆண் யானை உயிரிழந்தது.

இந்த வழக்கில் தம்பதி இருவருக்கும் இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நீதிபதி கே.சிவகுமாா் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.25,000 அபராதமும் விதித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டாா்.

இந்த வழக்குகளில் சிபிஐ சாா்பில் அரசு வழக்குரைஞா் வி.சுரேந்திர மோகன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.