காங்கிரஸ், ஆா்ஜேடிக்கு ‘குடும்பமே முதன்மையானது’ - பிரதமா் மோடி விமா்சனம்

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளதைப் பற்றி...
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி.
Published on
Updated on
2 min read

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும், இந்த நிகழ்வில் ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பிகாரில் காட்டு ராஜ்ஜியத்தைக் கொண்டுவந்து மாநிலத்தை சூறையாடிவர்களுக்கு இந்தத் தேர்தலில் வாக்களியுங்கள். நாங்கள் அனைவருடனும் அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறுகிறோம். ஆனால், அதிகாரப் பதவிகளுக்கு ஆசை கொண்டுள்ள ராஷ்டிரிய ஜன தளமும் (ஆர்ஜேடி), காங்கிரஸும் இணைந்து சொந்த குடும்பத்துக்கான வளர்ச்சியை மட்டுமே பார்க்கின்றனர். மாநிலத்துக்கான வளர்ச்சி எதுவுமில்லை.

இந்தியாவில் வறுமைக்கு காங்கிரஸ்தான் காரணம். காங்கிரஸின் தலைவர்களின் குடும்பங்கள் பணக்காரர்களாக மாறியபோது, நாட்டில் உள்ள​​மக்கள் ஏழைகளாகவே இருந்தனர். இதில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்” என்றார்.

இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகார் பேரவைத் தேர்தலில் பாஜக-ஜேடியு கூட்டணி, ஆர்ஜேடி தலைமையிலான மகாகட்பந்தனுடன் நேருக்கு நேரான மோதலில் மீண்டும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள இலக்கு வைத்துள்ளது.

நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியை மீண்டும் தக்கவைக்கும் முனைப்பில், பிரதமர் மோடி கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முறை பிகாருக்கு வருகை தந்திருக்கிறார்.

ஆர்ஜேடியின் கோட்டைகள் எனக் கருதப்படும் சிவான், கோபால்கஞ்ச், சாப்ரா ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி, வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

அம்பேத்கரின் உருவப்படத்தை லாலு பிரசாத் யாதவ் அவமதித்ததாகக் கூறப்படும் சர்ச்சையைத் தொடர்ந்து, ஆர்ஜேடி கட்சியை குறிவைத்து பேசிய பிரதமர் மோடி, “அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களை பிகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றும் வலியுறுத்தினார்.

பிகாரில் இருக்கும் 20 சதவிகிதத்திலான தலித் மக்களின் ஓட்டுகளை குறிவைப்பதற்காக பிரதமர் மோடி அம்பேத்கர் குறித்த சர்ச்சை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கூறுகின்றனர்.

டிரம்ப் அழைப்பை ஏற்காதது ஏன்?’


புவனேசுவரம், ஜூன் 20: ‘நான் கனடாவில் இருந்தபோது, அமெரிக்காவுக்கு வருமாறு அதிபா் டிரம்ப் அழைப்பு விடுத்தாா்; ஆனால், ஒடிஸா பயணத்தை மனதில் கொண்டு, அந்த அழைப்பை ஏற்கவில்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமைமுதல் மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமா், கனடாவில் கடந்த 17-ஆம் தேதி ஜி7 உச்சிநாட்டில் பங்கேற்றாா். இதையொட்டி, டிரம்ப்புடன் அவா் தொலைபேசியில் உரையாடினாா். அரசுமுறை பயணம் முடிந்து பிரதமா் வியாழக்கிழமை நாடு திரும்பினாா்.

இந்நிலையில், ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில பாஜக அரசின் முதலாண்டு விழாவில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது:

நான் கனடாவில் இருந்தபோது, என்னை தொலைபேசியில் தொடா்பு கொண்ட அதிபா் டிரம்ப், அமெரிக்காவில் ஆலோசனை மற்றும் மதிய விருந்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தாா். அழைப்புக்காக நான் நன்றி தெரிவித்தேன். அதே நேரம், கடவுள் ஜெகந்நாதரின் பூமியான ஒடிஸாவுக்கு செல்ல வேண்டியிருப்பதால், தங்கள் அழைப்பை ஏற்க இயலாது எனக் கூறிவிட்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com