அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை நிராகரித்தது ஏன்? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விரிவாகத் தெரிவித்திருக்கிறார்.
கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்திப்பதற்காகவும், ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரில் முடிவு எட்டப்படவும், எதுவும் குறிப்பிடாமல் திடீரென மாநாட்டில் இருந்து வெளியேறினார். இதனால், பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் சந்திக்க முடியாமல் போனது.
அதிபர் டிரம்ப்பிடம் 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியிருந்த பிரதமர் மோடி, “போர் நிறுத்தத்தில் யாருடைய சமரசத்தையும் இந்தியா ஏற்காது” எனத் தெரிவித்திருந்தார். மேலும், அமெரிக்கா வரக் கூறியிருந்த டிரம்ப்பின் அழைப்பையும் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று(ஜூன் 20) காலை பிகாரின் சிவானில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரதமர் மோடி, மாலையில் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.
பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “புனிதமான மஹா பிரபுவின் இடமான ஒடிசாவுக்கு திரும்புவதற்காகவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை நிராகரித்து இங்கு வந்திருக்கிறேன்.
இரண்டு நாள்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றிருந்தேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நீங்கள் கனடா வந்திருப்பதால் வாஷிங்டன் வாருங்கள். இவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிடுவோம் என்றார்.
உங்கள் அழைப்புக்கு நன்றி. ஆனால், நான் அவரிடம் கூறினேன். எனக்கு மஹாபிரபுவின் இடத்தில் வேலை இருக்கிறது. மஹா பிரபுவின் மீதான பக்தியும் அன்பும் மட்டுமே என்னை இங்கு அழைத்து வந்திருக்கின்றன” எனக் கூறினார்.
ஒடிசாவில் பாஜகவின் முதல் அரசின் முதலாமாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடந்தாண்டு பாஜக ஆட்சியமைத்த பின்னர் 6-வது முறையாக ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், அங்கு குடிநீர், சுகாதாரக் கட்டமைப்புகள், நகர்ப்புறச் சாலைகள், பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட ரூ.18,600 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க... ஈரானுக்காக ஒருநாளுக்கு ரூ. 8,600 கோடி செலவிடும் இஸ்ரேல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமானது: டொனால்ட் டிரம்ப்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


