Chhattisgarh
சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Published on

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

அப்போது, ​​சோட்டேபெதியா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக கான்கர் காவல் கண்காணிப்பாளர் இந்திரா கல்யாண் பிடிஐயிடம் தெரிவித்தார்.

கோத்ரி ஆற்றின் மறுபுறத்தில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பது குறித்த தகவல்களின் அடிப்படையில் அமதோலா, கல்பர் கிராமங்களுக்கு இடையே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

ஒரே இரவில் உக்ரைனின் 61 ட்ரோன்களை வீழ்த்திய ரஷியா!

என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து இதுவரை பெண் நக்சலைட்டின் உடல் மற்றும் ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. மேலும் விவரங்கள் பின்னர் பகிரப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com