295 பெட்டிகளுடனும், 6 என்ஜின்களுடனும் இந்திய ரயில்வே ஒரு ரயிலை இயக்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? நாட்டிலேயே மிக நீண்ட ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பிடித்திருக்கிறது. இதன் பெயர் சூப்பர் வாசுகி.
இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகீறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.
சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். இவற்றில் மிக நீண்ட ரயில் என்ற பெருமையோடு சப்தமே இல்லாமல் சூப்பர் வாசுகி ரயில் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இயக்கப்படும் மிக நீண்ட சரக்கு ரயில் என்ற பெருமையோடு ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் வாசுகி. இந்த ரயிலே கிட்டத்தட்ட 3.5 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். இதில் 295 சரக்குப் பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் மிக நீண்ட ரயில் என்ற பெருமையோடு ஓடிக்கொண்டிருக்கிறது.
சிறு வயதில் சரக்கு ரயிலின் பெட்டிகளை எண்ணுவதை சிறுவர்கள் விளையாட்டாக செய்வார்கள். ஆனால், இந்த சரக்கு ரயிலின் பெட்டிகளை எண்ணத் தொடங்கினால் கண்களே களைப்படைந்துவிடும் என்கிறார்கள்.
295 சரக்குப் பெட்டிகளை இழுத்துச் செல்ல 6 என்ஜின்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ரயில்வே கேட் பகுதியைக் கடந்துசெல்ல குறிப்பிட்ட நேரம் ஆகும்.
இந்த ரயில் தனது பயணத்தை முடிக்க 11.20 மணி நேரம் ஆகுமாம். சத்தீஷ்கரிலிருந்து நாக்பூருக்கு இயக்கப்படுகிறது.
சத்தீஸ்கரின் கொர்பா சுரங்கத்திலிருந்து நாள்தோறும் 27,000 டன் நிலக்கரியை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மிக நீண்ட வடிவத்துக்காக, சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் வாசுகிப் பாம்பின் பெயர் இந்த சரக்கு ரயிலுக்கு சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.