
ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான பொறியியல் பட்டதாரி ’ஜானவி தங்கேட்டி’ அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘டைட்டான் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்(டிஎஸ்ஐ) மேற்கொண்டுவரும் விண்வெளி திட்டத்துக்கு தேர்வாகியுள்ளார். இதனை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு பொறியியல் படிப்பில் இளநிலை பட்டம் பெற்றுள்ள அவர், உரிய பயிற்சிக்குப் பின் 2029-ஆம் ஆண்டு விண்வெளிக்கு செல்வார் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஜானவிக்கு, ஆந்திர அமைச்சரும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் இன்று(ஜூன் 23) வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலகொல்லு பகுதியைச் சேர்ந்த ஜானவி, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ’சர்வதேச வான் மற்றும் விண்வெளி பயிற்சியை’ நிறைவு செய்துள்ள இந்தியாவைச் சேர்ந்த முதல் நபர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.
நாசா விண்வெளி செயலி போட்டியில்(நாசா ஸ்பேஸ் ஆப்ஸ் சேலஞ்ச்) மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் விருதுக்கான பிரிவில் ஜானவி வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாசாவின் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அழைத்துச் செல்லும் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தில் ஒருவராக தேர்வாகியுள்ள இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா வெகு விரைவில் விண்வெளி செல்லவுள்ளார். இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த இன்னொரு நபரும் அடுத்தக்கட்டமாக விண்வெளிக்குச் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.