மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு 3 பேர் பலி! புதியதாக 30 பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் புதியதாக 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பினால் அம்மாநிலத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை இன்று (ஜூன் 25) அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாக்பூரைச் சேர்ந்த 2 பேரும், சத்தாராவைச் சேர்ந்த ஒருவரும் பலியாகியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிரத்தில் 2,425 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதுடன், 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும், தலைநகர் மும்பையில் 973 பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் ஜூன் மாதம் மட்டும் அங்கு 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com