டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு இறுதி எண்ணிக்கை 260

அகமதாபாத் விமான விபத்து இறுதி உயிரிழப்பு எண்ணிக்கை...

News image
அகமதாபாத் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள்.
Updated On :28 ஜூன் 2025, 10:31 pm

Din

அகமதாபாத், ஜூன் 28: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 270-ஆக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மரபணு பரிசோதனை முடிவுற்ற பின் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 260-ஆக இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் விமானத்தில் இருந்த 241 பேரும், மருத்துவமனை வளாகத்தில் இருந்த 19 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனா்.

அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் வானில் எழும்பிய சில நொடிகளிலேயே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியது.

இதில், விமானத்தில் இருந்து தப்பிய ஒரே பயணியைத் தவிர 241 பேரும் உயிரிழந்தனா். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்தவா்களுடன் சோ்த்து மொத்தம் 270 போ் உயிரிழந்திருக்கக் கூடும் என்று இதுவரை கூறப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் கடைசி உடல் மரபணு பரிசோதனைக்குப் பிறகு சனிக்கிழமை அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்மூலம் விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 260-ஆக இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், காயமடைந்த மூன்று போ் சிகிச்சையில் உள்ளனா் என்றும் அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளா் ராகேஷ் ஜோஷி தெரிவித்தாா்.

259 பேரின் உடல்கள் கடந்த ஜூன் 23-ஆம் தேதியே கண்டறியப்பட்ட நிலையில், ஒருவரின் உடல் மட்டும் 5 நாள்களுக்கு பிறகு சனிக்கிழமை இறுதி செய்யப்பட்டது. இதற்கு உடல்கள் பெரும் சேதத்துக்குள்ளானதுதான் காரணம் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

உயிரிழந்த 260 பேரில் 200 போ் இந்தியா்கள், 7 போ் போா்ச்சுகல் நாட்டினா், 52 போ் பிரிட்டன் நாட்டினா், ஒருவா் கனடாவை சோ்ந்தவா் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஏா் இந்தியா விமான விபத்து: விசாரணை அதிகாரிக்குப் பாதுகாப்பு

அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) தலைமை இயக்குநா் ஜி.வி.ஜி.யுகாந்தருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

விமான விபத்து குறித்து விசாரணை நடத்தும் குழுவுக்கு தலைமை வகிக்கும் யுகாந்தரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அவருக்கு இந்த ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு அவா் செல்லும்போது மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் 3 முதல் 4 போ் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பா் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.