மணிப்பூரில் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு பற்றி...
Elderly woman, 3 others shot dead by gunmen in Manipur
கோப்புப்படம்DNS
Published on
Updated on
1 min read

மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில் மணிப்பூரில் சௌராசந்த்பூர் மாவட்டத்தில் இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் குக்கி சமூகத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் இருவர் குக்கி சமூகக் குழுவில் உள்ள தலைவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 வயது மூதாட்டி ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னர் காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Four people were shot dead by unidentified gunmen in Manipurs Churachandpur district in an ambush on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com