மகாராஷ்டிரத்தில் 2,501 ஆக உயர்ந்த கரோனா!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 2,501 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
corona case
கரோனா பலி எண்ணிக்கை உயர்வு
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 2,501 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், ஒருசில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகவே பதிவாகி வருகின்றன.

இதன் மூலம், மகாராஷ்டிரம் மாநிலத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை கரோனா தொற்று எண்ணிக்கை 2,501ஐ எட்டியுள்ளது.

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புணேவில் 5, மும்பையில் 2, ராய்காட், பிம்ப்ரி-சின்ச்வாட், கோலாப்பூர், சத்ரபதி சம்பாஜி நகரில் தலா ஒருவருக்கு கரோனா பதிவாகியுள்ளது. மேலும் கோலாப்பூரைச் சேர்ந்த ஒருவர் இணை நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

ஜனவரி முதல மாநிலம் முழுவதும் மொத்தம் 29,757 கரோனா சோதனைகளை நடத்தியுள்ளதாகவும், இன்று வரை கரோனா பாதித்த 2,365 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மும்பையில் இந்த ஆண்டு இதுவரை 992 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் ஜூன் மாதத்தில் மட்டும் 551 பேர் அடங்குவர்.

மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 37 பேருக்கு இணை நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகச் சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Maharashtra on Monday recorded 13 fresh cases of COVID-19, while one infected patient with comorbidities died, the state health department said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com