கர்நாடக முதல்வர் மாற்றமா? விமர்சனத்துக்கு உள்ளான கார்கே பதில்!

கர்நாடக முதல்வர் மாற்றமா? விமர்சனத்துக்கு உள்ளான கார்கே பதில்!
Mallikarjun Kharge
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே PTI
Published on
Updated on
1 min read

கர்நாடக முதல்வர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த விளக்கத்தை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கர்நாடகத்தின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை, கட்சி மேலிடம் கர்நாடகத்துக்கு அனுப்பியுள்ளது.

பெங்களூரில் மூன்று நாள்கள் முகாமிடும் சுர்ஜேவாலா, மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களை தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கர்நாடக முதல்வர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “முதல்வரை மாற்றுவது தொடர்பான முடிவை எடுப்பது கட்சித் தலைமையின் கைகளில்தான் உள்ளது. கட்சித் தலைமை என்ன முடிவெடுக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. முடிவெடுக்கும் உரிமையை உயர்நிலைக் குழுவிடம் விட்டுவிட்டோம், நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. யாரும் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.

பாஜக விமர்சனம்

மல்லிகார்ஜுன கார்கேவின் பதிலை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:

“காங்கிரஸ் தலைவராக இருந்தாலும், தான் உயர்நிலைக் குழுவில் இல்லை என்று கார்கே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். காங்கிரஸ் ஒரு குடும்பக் கட்சி.

ஒரு தலித் தலைவர், மன்மோகன் சிங்கைப் போல கட்டுப்படுத்தப்படுகிறார். மிகவும் வெட்கக் கேடானது.

ராகுல் காந்தி பிறந்த நாள் விளம்பததின்போதும், பிரியங்காவின் வேட்புமனுத் தாக்கலின்போதும் கார்கே மோசமாக அவமதிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

BJP members are criticizing Congress leader Mallikarjun Kharge's explanation regarding the Karnataka Chief Minister issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com