சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மார்ச் 7, 8-ல் குஜராத் செல்கிறார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வருகிற மார்ச் 7, 8 தேதிகளில் குஜராத் செல்கிறார்.

News image
ராகுல் காந்தி
Updated On :5 மார்ச் 2025, 11:06 am

DIN

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வருகிற மார்ச் 7, 8 தேதிகளில் குஜராத் செல்கிறார்.

குஜராத் மாநிலத்திற்கு 2027 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி இப்போதிலிருந்தே தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகிற மார்ச் 7, 8 தேதிகளில் குஜராத் செல்கிறார். அங்கு அவர் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து அடுத்த பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்கிறார்.

தொடர்ந்து அடுத்த மாதம் ஏப்ரல் 8, 9 தேதிகளில் ஆமதாபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆய்வு செய்தார். மேலும் அவர் அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தை பார்வையிட்டு படேலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.