
சிங்கப்பூரில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் இந்தியருக்கு சுமார் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நிரந்தரமாகக் குடியேறிய சாஜன் ஓபராய் (35) மீது 15 வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், 5 குற்றச்சாட்டுகளுக்கு உண்மையை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஒரு வருடம் மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு 18,500 சிங்கப்பூர் டாலர் (ரூ. 12.1 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது.
போதைப் பொருள் பயன்படுத்தியது, வணிக வளாகத்திலிருந்து மதுப் புட்டிகளைத் திருடியது, உணவு விடுதியில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட புகார்களில் சாஜன் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிக்க: எலான் மஸ்க் இந்தியாவில் வெற்றி பெறுவது கடினம்: சஜ்ஜன் ஜிண்டால்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.