
இந்தியச் சந்தையில் எலான் மஸ்க் வெற்றி பெறுவது கடினம் என்று தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா கார்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக இந்தியாவில் செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியச் சந்தையில் எலான் மஸ்க் வெற்றி பெறுவது கடினம் என்று தொழிலதிபரும் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார்.
எர்ன்ஸ்ட் அன்ட் யங் தொழில்முனைவோர் விருதுகளில் பங்கேற்ற சஜ்ஜன் ஜிண்டால் பேசியதாவது, ``டெஸ்லா நிறுவனர் அறிவாளிதான்; அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்காக, அவர் இந்தியச் சந்தையில் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது. அமெரிக்காவில் இருக்கும் அவருக்கு, இந்தியாவின் களச் சூழல் மற்றும் இந்தியாவின் தேவை குறித்து தெரியாது.
நாங்கள் இங்கேயே இருக்கிறோம். மஹிந்திரா, டாடா செய்யக் கூடியதை எலான் மஸ்க்கால் செய்ய முடியாது. அது சாத்தியமுமில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிழலிருக்கும் அவரால் நினைத்ததை செய்ய முடியும். ஸ்பேஸ்எக்ஸ் மூலம் ராக்கெட்கூட அவர் செலுத்தலாம். ஆனால், இந்தியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல’’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.