ஆன்லைன் 'டயட்'டால் கேரள இளம்பெண் உயிரிழந்த சோகம்!

உடல் எடையைக் குறைப்பதற்காக ஆன்லைன் விடியோக்களைப் பார்த்து டயட் இருந்த கேரள பெண் ஒருவர் உயிரிழப்பு.
ஆன்லைன் 'டயட்'டால் கேரள இளம்பெண் உயிரிழந்த சோகம்!
Published on
Updated on
1 min read

உடல் எடையைக் குறைப்பதற்காக ஆன்லைன் விடியோக்களைப் பார்த்து டயட் இருந்த கேரள பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஸ்ரீநந்தா என்பவர், உடல் எடை அதிகரித்துவிடுமோ என்று பயந்து, உடல் எடையைக் குறைக்க யூ-ட்யூபில் ஆன்லைன் விடியோக்களைப் பார்த்து உணவுக் கட்டுப்பாட்டை(டயட்) மேற்கொண்டுள்ளார்.

கடந்த 5 -6 மாதங்களாக டயட்டில் அவர் உணவை முழுவதுமாகத் தவிர்த்து தண்ணீர் மட்டுமே குடித்துள்ளார். தண்ணீர் காய்கறிகள், பழங்களை மட்டுமே சாப்பிட்டுள்ளார். மேலும் அதிகமாக உடற்பயிற்சி செய்துள்ளார். முழுவதுமாக ஆன்லைன் விடியோக்களில் கூறியபடி அவர் டயட்டை பின்பற்றிய ஸ்ரீநந்தா அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

கடந்த 5 -6 மாதங்களாக உணவைத் தவிர்த்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரு மாதங்களுக்கு முன்னதாக கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இரு வாரங்களுக்கு முன்னர் ரத்த சர்க்கரை அளவு கடுமையாகக் குறைந்து பின்னர் தலசேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவுக்குப் பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com