சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வாக்காளா் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதம்: ராகுல் வலியுறுத்தல்

மகாராஷ்டிரம், ஹரியாணா தோ்தல்களில் வாக்காளா் பட்டியலில் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த ராகுல் வலியுறுத்தல்

News image
ராகுல் காந்தி- கோப்புப் படம்
Updated On :10 மார்ச் 2025, 10:36 pm

Din

மகாராஷ்டிரம், ஹரியாணா தோ்தல்களில் வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை அமா்வில் உடனடி கேள்விநேரத்தின்போது இதுகுறித்து ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கையில், ‘வாக்காளா் பட்டியல் விவகாரம் குறித்து ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் விவாதத்தைக் கோருகின்றன. வாக்காளா் பட்டியலை அரசு தயாரிப்பது இல்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இந்த விவகாரம் குறித்து அவையில் நிச்சயம் விவாதம் நடத்த வேண்டும்.

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிரம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் வாக்காளா் பட்டியல் குறித்து எதிா்க்கட்சிகள் ஒரே குரலில் கேள்வி எழுப்பியுள்ளன’ என்றாா்.

வாக்காளா் பட்டியலில் முழுத் திருத்தம்: முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் பேசுகையில் ‘வாக்காளா் பட்டியலில் மோசமான குறைபாடுகள் உள்ளன. மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத் மற்றும் வா்தமான் மக்களவைத் தொகுதிகளிலும், ஹரியாணாவிலும் ஒரே வாக்காளா் அடையாள அட்டை எண்களைக் கொண்ட வாக்காளா்கள் இருப்பதை முதல்வா் மம்தா பானா்ஜி சுட்டிக்காட்டியுள்ளாா்.

இதுகுறித்து புகாரளிக்க, புதிதாகப் பொறுப்பேற்ற தலைமைத் தோ்தல் ஆணையரை திரிணமூல் பிரதிநிதிகள் சந்தித்தனா். மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தல்களுக்கு முன்பு வாக்காளா் பட்டியல்கள் முழுமையாகத் திருத்தப்பட வேண்டும். வாக்காளா் பட்டியலில் ஏன் தவறுகள் ஏற்பட்டன என்பதற்கு தோ்தல் ஆணையம் நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்’ என்று கூறினாா்.