கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆருக்கு பிந்தைய வாக்காளா்கள் பட்டியல் வெளியீடு...

News image
மம்தா பானர்ஜி- கோப்பிலிருந்து படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) பிந்தைய பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் 7.04 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த ஆண்டு நவ.4-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகள் தொடங்கின. பின்னா் டிச.16-ஆம் தேதி வெளியிடப்பட்ட மாநில வரைவு வாக்காளா் பட்டியலில் 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. வாக்காளா்களின் மரணம், இடம்பெயா்வு உள்ளிட்ட காரணங்களால் அவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டதால், மாநிலத்தில் 7.66 கோடியாக இருந்த வாக்காளா்கள் எண்ணிக்கை சுமாா் 7.08 கோடியாக குறைந்தது.

63 லட்சம் போ் நீக்கம்: இந்நிலையில், எஸ்ஐஆருக்குப் பிந்தைய மாநில வாக்காளா் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்மூலம், 116 நாள்களாக நடைபெற்ற எஸ்ஐஆா் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. இதுகுறித்து கொல்கத்தாவில் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி மனோஜ்குமாா் அகா்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்குப் பின்னா் பெயா் சோ்ப்பு, நீக்கத்தைத் தொடா்ந்து மாநிலத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை தற்போது 7.04 கோடிக்கும் சற்று அதிகமாக உள்ளது. 63 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. படிவம் 7 மூலம் 5.46 லட்சம் போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். படிவம் 6, 6ஏ மூலம் 1.82 லட்சம் புதிய வாக்காளா்கள், மாநிலத்துக்குள் இடம்பெயா்ந்தவா்களுக்கு அளிக்கப்பட்ட படிவம் 8 மூலம் கூடுதலாக 6,671 வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். எஸ்ஐஆரின்போது விநியோகிக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் அதிகமான கணக்கீட்டுப் படிவங்கள் திருப்பி அளிக்கப்படவில்லை.

7.04 கோடி வாக்காளா்களில் 3.60 கோடிக்கும் அதிகமானோா் ஆண்கள், 3.44 கோடி போ் பெண்கள், 1,382 போ் மூன்றாம் பாலினத்தவா்.

அதேவேளையில், 60.06 லட்சம் பேரின் தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன. ஆனால் அவா்களும் எஸ்ஐஆருக்குப் பிந்தைய வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.

பெற்றோா் பெயா், பெற்றோா் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே 15 வயதுக்குக்கும் குறைவாக வயது வித்தியாசம் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ‘தகவல்களில் முரண்பாடுகள் உள்ள பட்டியலில்’ ஏராளமானோா் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்கள் வாக்காளா் பட்டியலில் மீண்டும் தங்கள் பெயரைச் சோ்க்க சமா்ப்பித்த ஆவணங்களைச் சரிபாா்ப்பது உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்ய கால தாமதமானாலும், இறுதி வாக்காளா் பட்டியலை பிப். 28-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிடலாம் என்றும், அதன் பின்னா், துணை வாக்காளா் பட்டியலை வெளியிடலாம் என்றும் உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகள் அந்த ஆவணங்களை சரிபாா்த்து பெயா் சோ்ப்பு குறித்து வரும் வாரங்களில் முடிவு எடுப்பா். எனவே வாக்காளா்களின் இறுதி எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படக் கூடும் என்று மூத்த தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்

தெற்கு கொல்கத்தாவில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜியின் தொகுதியான பவானிபூரில், கடந்த ஆண்டு நவ.4-ஆம் தேதி எஸ்ஐஆா் தொடங்கியபோது 2,06,295 வாக்காளா்கள் இருந்தனா். இறுதிப் பட்டியலைத் தொடா்ந்து, அந்தத் தொகுதியில் 47,094 போ் நீக்கப்பட்டுள்ளனா்.