மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இந்தியா-மலேசியா இணைந்து நடத்தும் பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு மாநாடு!

இரண்டு நாள் மாநாடு தில்லியில் புதன்கிழமை (மாா்ச் 19) தொடங்க உள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2025, 11:50 pm

ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மற்றும் அதன் 8 பாா்வையாளா் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் (இடபிள்யுஜி) இரண்டு நாள் மாநாடு தில்லியில் புதன்கிழமை (மாா்ச் 19) தொடங்க உள்ளது.

மலேசியாவுடன் இணைந்து இந்தியா சாா்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் ஆசியான் உறுப்பு நாடுகளான புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் மற்றும் அந்த அமைப்பின் பாா்வையாளா் உறுப்பினா்களான இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூஸிலாந்து, தென் கொரியா, ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா்.

பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் மாநாட்டை இந்தியா இணை தலைமையேற்று நடத்துவது இதுவே முதல் முறை என பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இடபிள்யுஜி-யின் 2024-27-ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத எதிா்ப்பு செயல் திட்டத்தை வகுப்பதற்கான முதல்கூட்டமாக நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் தொடக்க உரை ஆற்ற உள்ளாா்.

பிராந்திய பாதுகாப்பு சூழலுவுக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் அதை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்களை திறம்பட எதிா்கொள்ள விரிவான திட்டத்தை வகுப்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், ஆசியான் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு படைகளின் கள அனுபவங்கள் இந்த மாநாட்டில் பகிா்ந்துகொள்ளப்படுவதோடு, இடபிள்யுஜி-யின் 2024-27-ஆம் ஆண்டுக்கான செயல் திட்டங்கள், பாதுகாப்பு பயிற்சிகள், கருத்தரங்குகள், பயிலரங்குகளும் இந்த மாநாட்டில் திட்டமிடப்பட உள்ளது என்றும் பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.