பாஜக எம்எல்ஏ மனைவி புகார்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கைது!

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்பட்டது பற்றி...
ரீத்தம் சிங்
ரீத்தம் சிங்
Published on
Updated on
1 min read

அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏ மானவ் தேகா மனைவி அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்பட்டார்.

அஸ்ஸாம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரீத்தம் சிங் தனது எக்ஸ தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேரின் புகைப்படங்களைப் பகிர்ந்து இவர்களுக்குக் கிடைத்ததைப் போன்று பாஜகவைச் (பாஜக எம்எல்ஏ மானவ் தேகா உள்பட 3 பேரி) சேர்ந்த பாலியல் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும். சட்டம் அனைவருக்கும் சமமானதா? என்று கேள்வி எழுப்பிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரீத்தம் சிக் மீது லட்சுமிபூர் காவல்துறையில் மானவ் தேகாவின் மனைவி ராஜஸ்ரீ தேகா புகாரளித்தார். அவர்மீது மானநஷ்ட வழக்கு மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் அஸ்ஸாம் காவல்துறையால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் பதியப்பட்டதற்கானன் காரணம் பற்றிக் கேட்டபோது, பட்டியலினத்தைச் சேர்ந்த தனது மனைவி அந்தப் பதிவால் பாதிக்கப்பட்டதாக மானவ் தேகா குறிப்பிட்டார்.

கௌஹாத்தி உயர் நீதிமன்ற வழக்குரைஞரான ரீத்தம் சிங் பாஜகவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையை அஸ்ஸாம் அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

"முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மாவின் கீழ் காவல்துறை தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து அமித் ஷாவுக்கு தெரியுமா? அசாம் காவல்துறையை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். இது தவறான குற்றச்சாட்டு” என காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய் தெரிவித்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ராஜஸ்ரீ தேகா, “நான் ஒரு பெண், மனைவி, சகோதரி, தாய் மற்றும் பட்டியலினைதை சேர்ந்தவள். நான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன். பொறுப்பான பதவிகளில் இருக்கும் என் கணவரை ‘பாலியல் வன்கொடுமை குற்றவாளி’ என்று கூறுவது எவ்வளவு கொடுமையானது” என்று அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com