பெங்களூரு வாகன ஓட்டிகளே.. இது தெரியுமா?

பெங்களூரு வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தல்.
வாகன ஓட்டிகளே..
வாகன ஓட்டிகளே..
Published on
Updated on
1 min read

ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வரும் பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு அடுத்து பேரிடியாக வந்திருப்பது போக்குவரத்து விதி மீறலுக்கான கட்டண உயர்வு.

இந்தியாவில் மார்ச் 1 ஆம் தேதி முதல் போக்குவரத்து விதிமீறல்களுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பெங்களூரு மாநகரில் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால், அங்கு இந்த விதிமுறை மற்றும் கட்டண உயர்வு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது என்றால், ரூ.1000 என்பது ரூ.1,500 ஆக அல்ல, மாறாக பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

முன்பு குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறு வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி ரூ.10,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறைத் தண்டனையும், தொடர்ச்சியாக இதே குற்றத்தில் ஈடுபட்டால் ரூ.15 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுளள்து.

ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 தான் இதுவரை அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. இனி ரூ.1,000 மற்றும் 3 மாதங்கள் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகளும் பாயும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோல அனைத்து போக்குவரத்து விதிமீறல் அபராதங்களும் பத்து மடங்காக அதிகரிக்கப்பட்டிருப்பதால், பெங்களூரு வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com