
நாடு முழுவதும் இன்று(மார்ச் 19) நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு மையங்களுக்குச் சென்ற தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில்வேயில் 18,799 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு முதல்நிலை கணினித் தேர்வு முடிவடைந்து முடிவுகள் வெளியான நிலையில் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்றும் நாளையும்(மார்ச் 19, 20) இரண்டாம் நிலை கணினித் தேர்வு(CBT 2) நடைபெறவிருந்தது.
இதற்காக தேர்வர்கள் இன்று காலையே தேர்வு மையங்களுக்குச் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க | விரைவில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்! - அமைச்சர் சக்கரபாணி தகவல்
ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று நடைபெறவிருந்த இரண்டு ஷிப்ட் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுக்கு சற்று நேரம் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இன்று நடைபெறவிருந்த தேர்வு வேறு நாளில் நடத்தப்படும் என்றும் அதுகுறித்த அறிவிப்பு ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் அல்லாமல் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ரயில்வே தேர்வு வாரியமும் இதற்கு விளக்கம் அளித்திருந்தது.
எனினும் தமிழக தேர்வர்கள் தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இன்று தேர்வு எழுதச் சென்ற நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பணம் செலவழித்து பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு ரயில்வே வாரியம் விளக்கமளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதையும் படிக்க | குப்புறப்படுத்துத் தூங்குறீங்களா? அது நல்லதுதானா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.