மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

நக்சல்களுக்கு எதிராக கருணையற்ற அணுகுமுறை: அமித் ஷா!

பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றொரு பெரிய வெற்றி...

அமித் ஷா

Updated On :

நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான தனது பயணத்தில் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றொரு பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமித் ஷாவில் எக்ஸ் பதிவில்,

நக்சல்கள் சரணடை அனைத்து சந்தர்பங்களும் வழங்கப்பட்ட போதிலும் சரணடையாத தீவிரவாதிகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசு இரக்கமற்ற அணுகுமுறையைச் செலுத்தி வருகின்றது. பாதுகாப்புப் படையினர் இன்று மற்றொரு பெரிய வெற்றியைக் கண்டுள்ளனர்.

அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் நக்சல் இல்லாத நாடாக மாறப்போகிறது என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

இன்று காலை சத்தீஸ்கரில் நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நக்சல்கள் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் காவலர் ஒருவர் வீர மரணடைந்துள்ளார்.

பிஜப்பூர் மாவட்டத்தில் 18 நக்சல்களும், கான்கர் பகுதியில் நான்கு மாவோயிஸ்டுகள் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படை (DRG) ஆகியவற்றின் கூட்டுக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிபொருள்கள் மீட்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.