பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வந்தது சரி, பிரதமர் எப்போது வருவார்? காங்கிரஸ்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது..

News image

காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ்

Updated On :22 மார்ச் 2025, 9:47 am

DIN

மணிப்பூர் வருகை தந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவைக் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் வரவேற்றார் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது மாநிலத்திற்கு வருகை தருவார் என்ற கேள்வியை எழுப்பினார்.

தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ரமேஷ் கூறுகையில்,

மணிப்பூருக்கு வருகை தந்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன், என். கோடீஸ்வர் ஆகிய ஆறு நீதிபதிகளை நாங்கள் வரவேற்கிறோம்.

மாநிலத்தில் கடந்த 22 மாதங்களில் இனகலவர மோதலால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். சுமார் 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இன்றும் கூட மணிப்பூரில் அச்சமான சூழலே நிலவி வருகின்றது.

மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13ல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மணிப்பூரில் அரசியலமைப்பு முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிட்டதாக ஆக.1ல் உச்சநீதிமன்றம் கூறிய பிறகும், குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த 18 மாதங்கள் ஆனது ஏன்? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுச் சென்றது நல்லது, ஆனால் பிரதமர் எப்போது மணிப்பூருக்கு வருவார்கள் என்பதுதான் பெரிய கேள்வி?

சூரசந்த்பூரில் உள்ள நிவாரண முகாமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று காலை பார்வையிட்டனர். முகாம்களில் உள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதங்களின்போது மணிப்பூரின் நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசாததற்காகவும் காங்கிரஸ் எம்பி விமர்சித்தார்.

உள்துறை அமைச்சர் தனது உள்துறை அமைச்சகத்தின் பணிகள் குறித்து மாநிலங்களவையில் சுமார் 4 மணி நேரம் பதிலளித்தார். ஆனால் மணிப்பூர் பற்றி அவர் அதிகம் பேசவில்லை. தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பாஜகவிடம், பற்றி எரியும் மணிப்பூர் குறித்து எந்த பதிலும் இல்லை. பிரதமர் ஏன் அங்குச் செல்லவில்லை என்பதற்கும் இதுவரை பதில் இல்லை என்று அவர் விமர்சித்தார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி மணிப்பூரில் நடைபெற்ற மோசமான வன்முறை சம்பவங்கள் நூற்றுக்கணக்கானோா் உயிரிழக்கவும், 50,000-க்கும் மேற்பட்டவா்கள் இடம்பெயரவும் வழிவகுத்தது. இன்றளவும் அந்த மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்களில் மக்கள் தஞ்சமடைவது நீடித்து வருகிறது என்பது வருந்தத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.