
மியூச்சுவல் ஃபண்ட்ஸ்களில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச் சந்தை, நிறுவனங்கள் மீது முதலீடு, இரண்டாம்நிலை தொழில், சேமிப்பு என்று பல்வேறு வகைகளில் நிதி நிலைமையை மேம்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் மியூச்சுவல் ஃபண்ட்ஸும் அடங்கும்.
தற்போது, பெண்களும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதாக ஆய்வு கூறுகிறது. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டாளர்களில் 25 சதவிகிதத்தினர் பெண்களாக உள்ளனர். மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யும் பெண்களின் சொத்து மதிப்பு இரட்டிப்பாவதாகவும் கூறுகிறது.
2020 முதல் எஸ்ஐபி-க்களில் அதிகரிக்கும் முதலீடு 250 சதவிகிதமாக இருந்தாலும், அவர்களின் முதன்மை தேர்வாக ஈக்விட்டியே உள்ளது. 2024 டிசம்பர் தரவுகளின்படி, முதலீட்டாளர்களில் நான்கில் ஒருவர் பெண் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளனர்.
2019 மார்ச் மாதத்தில் பெண் முதலீட்டாளர்கள் நிர்வாகத்தின்கீழான சொத்து மதிப்பு ரூ. 4.59 கோடியாக இருந்த நிலையில், 2024 மார்ச் மாதத்தில் ரூ. 11.25 கோடியாக உயர்ந்தது.
பெண் முதலீட்டாளர்கள், பெரும்பாலும் நீண்டகால முதலீட்டையே விரும்புகின்றனர். நிதி சுதந்திரம் மற்றும் வருங்காலத்துக்கான பாதுகாப்பு அரணாகக் கருதி, பெண்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருவது சிறந்தது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
இதையும் படிக்க: டைம் டிராவல் செய்ய ஆசையா? கூகுளின் புதிய அம்சம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.