டைம் டிராவல் செய்ய ஆசையா? கூகுளின் புதிய அம்சம்!

கூகுள் மேப்பில் டைம் டிராவல் செய்யும்வகையில் புதிய அம்சம் அறிமுகம்
டைம் டிராவல் செய்ய ஆசையா? கூகுளின் புதிய அம்சம்!
ENS
Published on
Updated on
1 min read

கூகுள் மேப்பில் டைம் டிராவல் செய்யும்வகையில் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த நூற்றாண்டில் உலகம் எவ்வாறு இருந்தது என்று தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், நேரில் சென்று பார்ப்பது என்பது சாத்தியமற்றது. அந்த வகையில், நேரில் சென்று பார்க்க முடியாது என்றாலும், அதனை டிஜிட்டல் முறையில் காணலாம் என்ற நோக்கில், கூகுள் நிறுவனம் புதிய யுக்தியைக் கொண்டு வந்துள்ளது.

கூகுள் மேப் அல்லது கூகுள் எர்த் தளங்களில் 1990 ஆம் ஆண்டில் இருந்து தற்போதைய காலத்துக்கு இடைப்பட்டதில், ஏதேனும் ஓர் ஆண்டையும், ஓர் இடத்தையும் குறிப்பிட்டால், அந்த காலக்கட்டத்தில் நீங்கள் குறிப்பிட்ட பகுதி எவ்வாறு இருந்திருக்கும் என்று கூகுள் மேப் தளத்தில் காணக் கிடைக்கும்வகையில் புதிய தொழில்நுட்ப அம்சத்தை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

நீங்கள் குறிப்பிட்ட ஆண்டில், குறிப்பிட்ட பகுதியின் வீதிகள், கட்டடங்கள், வாகனங்கள் முதலானவை குறித்து கூகுள் மேப் புலப்படுத்தும். அந்த குறிப்பிட்ட ஆண்டில் இருந்த கட்டடங்கள், வீதிகள், வாகனங்களை தற்போதைய காலக்கட்டத்துடன் ஒப்பிட நினைப்பவர்களுக்கு இந்த புதிய அம்சம் உதவிகரமானதாக இருக்கலாம்.

இருப்பினும், இந்த புதிய அம்சம் லண்டன், பாரிஸ், பெர்லின் நகரங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த அம்சத்தில், பின்னோக்கி செல்லும் ஆண்டுகள் அதிகரிக்கப்படுவதுடன், பல்வேறு பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com