பாக்., கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டா பக்கங்கள் முடக்கம்! காரணம் என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம்
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது எனக் கூறப்படும் நிலையில் அந்நாட்டுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

அதில் ஒன்றாக, பாகிஸ்தானின் விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து இந்தியாவில் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான், சாஹின் ஷா அஃப்ரிடி உள்ளிட்ட முக்கிய வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

தற்போது, அவர்களது நாட்டில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடி வரும் அவர்கள் மூவரது சமூக வலைதளப் பக்கங்களையும் இந்தியாவிலிருந்து கணிசமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

இருப்பினும், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற வீரர் அர்ஷத் நதீம், மஹிரா கான், அலி ஜாஃபர் உள்ளிட்ட பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான சோயிப் அக்தர், ஷாஹித் அஃப்ரிடி மற்றும் பாசித் அலி உள்ளிட்டோரின் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 'பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும்'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com