
ஹரியாணாவில் தனியார் நகை கடன் வங்கியில் 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஹரியாணா மாநிலம், பரசுராம் சௌக்கில் தனியார் நகை கடன் வங்கி இயங்கி வருகிறது. வியாழக்கிழமை இரவு வங்கியின் ஷட்டர் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள் 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
வழக்கம்போல் வெள்ளிக்கிழமை அதிகாலை வங்கியின் பாதுகாவலர் பணிக்கு வந்தபோது வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கிளையின் மூத்த மேலாளருக்கு அவர் தகவல் கொடுத்தார்.
பின்னர் அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
நிகழ்விடத்தில் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, கொள்ளையர்கள் முதலில் பிரதான கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பின்னர் வங்கியின் லாக்கரில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
உள்ளே நுழைந்த விதத்தைப் பார்க்கும்போது, மர்ம நபர்களுக்கு வங்கியின் அமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முன்பே தெரிந்திருக்கலாம் எனத் தெரிகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகே குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.