98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு
பிரதிப் படம்
பிரதிப் படம்PTI
Updated on
1 min read

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் தெரிவித்தார்.

மே முதல் தேதியில் அமலாக்கத் துறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமலாக்கத் துறை நாள் நிகழ்ச்சியில் அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன் தெரிவித்ததாவது, 2014 ஆம் ஆண்டில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகுதான், அமலாக்கத் துறையில் அதிகளவிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கு முன்னர்வரையில், பணமோசடி சட்டங்கள் பயனற்றதாகவே இருந்தன என்று கூறினார்.

இதனைக் குறிப்பிட்டு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, அமலாக்கத் துறையில் பதிவு செய்யப்படும் 98 சதவிகித வழக்குகள் எதிர்க்கட்சியினருக்கு எதிரானவையே; மீதமுள்ள 2 சதவிகித வழக்குகள் பாஜகவுடன் சேர்ந்தவர்கள் மீதுதான் என்று கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ``பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, அமலாக்க வழக்குகள் அதிகரித்தது உண்மைதான். மேலும், கடந்த 11 ஆண்டுகளில் அமலாக்கத் துறைக்கு எதிராக 5,297 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், 47 பேர் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர்.

அமலாக்கத் துறை வழக்குகளில் தண்டனை விகிதம் வெறும் 0.7 சதவிகிதம் மட்டுமே. தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு 1,000 வழக்குகளில், 7 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் நிரூபிக்கப்படுகின்றனர். 1000 பேரில் 993 பேர் தவிர்த்து, 7 பேரை மட்டுமே சிறையில் அடைக்க அமலாக்கத் துறை முன்வருகிறது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட 1,739 வழக்குகள், தற்போது விசாரணையில் உள்ளன. இந்த வழக்குகளின் தீர்ப்பில் ஏற்பட்ட மந்தநிலைக்கு, நீதித்துறையின் தாமதமே காரணம்.

மேலும், இந்த வழக்குகளில் விசாரணை செயல்முறையை தண்டனையாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை மிரட்டுவதற்கும், பாஜக அரசின் உத்தரவுகளை பின்பற்றுவதற்கும்தான் விசாரணை செயல்முறை பயன்படுத்தப்படுகிறது’’ என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com