மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தம்! அணைகளின் மதகுகள் மூடல்!

செனாப் நதியின் குறுக்கே இருக்கும் அணைகளின் மதகுகள் மூடப்பட்டது பற்றி..

News image

பாக்லிஹார் அணை - ANI

Updated On :5 மே 2025, 6:52 am

ஜம்மு - காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்த இந்திய அரசு, அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதில், முக்கியமாக கடந்த 1960-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் நீர்மின்சார அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டுள்ளன.

அதேபோல், ரியாசி மாவட்டத்தில் சலால் அணையின் மதகுகளும் மூடப்பட்டது.

மேலும், வடக்கு காஷ்மீரில் ஜீலம் நதிக்கு குறுக்கேவுள்ள கிஷன்கங்கா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

அணைகளின் நீர் வெளியேற்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராக கருதப்படும்

சிந்து நதிநீா் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் போா் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே, சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ ஜா்தாரி கடந்த வாரம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.