நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருப்பதற்கான சோதனை மற்றும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய உள் விவகாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே, இந்தியா தரப்பில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க, பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
மற்றும் இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நாட்டில் உள்ள 250 மாவட்டங்களில் நடத்துமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டதாக மத்திய அரசின் உயா்நிலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் நேரத்தில் முக்கிய சேவைகள் ஏதேனும் பாதிக்கப்படுமா? நிறுத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால், மே 7ஆம் தேதி அத்தியாவசிய சேவைகளான ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து போன்றவை நிறுத்தப்படுவது குறித்தோ, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுவது குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.
எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் என அனைத்தும் வழக்கம் போல செயல்படும் என்று தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்

நாடு முழுவதும் 125 நாள் வேலைத் திட்டம் அறிமுகம்: ஆந்திரத்தில் தொடக்க நிகழ்ச்சி

முக்கிய தொழில்நுட்ப சோதனை: டிஆா்டிஓ-க்கு தில்லி முதல்வா் வாழ்த்து







