லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை என்ஐஏ கேட்டுள்ளது.

NIA

ANI

Published On :7 மே 2025, 5:59 pm IST

பஹல்காம் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் இருந்தால் சுற்றுலாப் பயணிகள், மக்கள் வழங்கலாம் என தேசிய புலானய்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள தகவலில்,

"பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கூடுதல் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஏதேனும் இருந்தால் சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள், உள்ளூர் மக்கள் உடனடியாக தங்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.

தகவல் இருக்கும்பட்சத்தில் அவர்கள் 9654958816 என்ற மொபைல் எண் அல்லது 011 24368800 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தாக்குதல் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கலாம்.

புகைப்படங்கள், விடியோக்கள் இருக்கும்பட்சத்தில் என்.ஐ.ஏ. அதிகாரி தொடர்புகொண்டு அவற்றைப் பெறுவார்" என்று கூறியுள்ளது.

முன்னதாக கடந்த ஏப். 22 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக என்ஐஏ விசாரித்து வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு சுமார் 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் இதுதொடர்பாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.