திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

உத்தரகாசியில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி!

உத்தரகாசி ஹெலிகாப்டர் விபத்து பற்றி...

News image

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர். - PTI

Updated On :8 மே 2025, 5:40 am

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் வியாழக்கிழமை காலை பலியாகினர்.

மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாசி மாவட்டம் கங்கநானி அருகேவுள்ள கங்கோத்ரி கோயிலுக்கு 6 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற தனியார் ஹெலிகாப்டர் இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரின் விமானியும் விபத்தில் சிக்கினார்.

விபத்து குறித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் விரைந்தனர்.

இந்த நிலையில், விபத்தில் 5 பேர் பலியானதாகவும் இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கர்வால் கோட்ட ஆணையர் வினய் சங்கர் பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும் என்று விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.