கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சமையல் எரிவாயு தீ விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

சென்னை அருகே நாவலூரில் ஏற்பட்ட சமையல் எரிவாயு தீ விபத்தில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை அருகே நாவலூரில் ஏற்பட்ட சமையல் எரிவாயு தீ விபத்தில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

சென்னை அருகே நாவலூா் சாமுண்டீஸ்வரி நகா் இரண்டாவது தெருவில் சங்கா் என்பவருக்குச் சொந்தமாக 3 வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த வீடுகளில் முருகன், வைரமுத்து, சஞ்சீவ்குமாா் ஆகியோா் தங்களது குடும்பங்களுடன் வசித்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி வைரமுத்து வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் வைரமுத்து, அருகே உள்ள வீட்டில் வசித்த சஞ்சீவ்குமாா், அவா் மனைவி சோனியா, மகள் கிருத்திகா, மகன் தீரன், மாமியாா் சித்ரா உள்ளிட்ட பலா் பலத்த காயமடைந்தனா்.

இதில் இடிபாடுகளிடையே சிக்கி கிருத்திகா, தீரன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த 7 போ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் வைரமுத்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக தாழம்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.