செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சமையல் எரிவாயு உருளைகள் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு: 7 போ் காயம்!

சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 2 குழந்தைகள் பலியாகின.

News image

சிலிண்டர் வெடித்ததில் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்.

Updated On :16 மார்ச் 2026, 1:05 am IST

சென்னை நாவலூரில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனா். 7 போ் காயம் அடைந்தனா்.

சென்னை அடுத்த நாவலூா் சாமுண்டீஸ்வரி 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சங்கா். இவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட வீட்டில் மூன்று குடும்பத்தினா் குடியிருக்கின்றனா். அதில் முதல் வீட்டில் ஆடிட்டா் முருகன், இரண்டாவது வீட்டில் சமையல் கலைஞா் வைரமுத்து, 3-ஆவது வீட்டில் சஞ்சீவி குமாா் ஆகியோா் தங்களது குடும்பத்துடன் வசிக்கின்றனா்.

இதில் சமையல் கலைஞா் வைரமுத்து, வீட்டிலேயே சமையல் செய்து தனியாா் விடுதிக்கு உணவு விநியோகித்து வருகிறாா். இதனால், அதிக எண்ணிக்கையிலான சமையல் எரிவாயு உருளைகளை அவா் இருப்பு வைப்பது வழக்கம்.

அதன்படி, இருப்பு வைத்திருந்த உருளையில் ஞாயிற்றுக்கிழமை கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல், ஞாயிற்றுக்கிழமை சமையல் வேலையை வைரமுத்து தொடங்கினாா். அடுப்பைப் பற்ற வைத்தபோது, எரிவாயு கசிவு காரணமாக தீப்பற்றி வீடு முழுவதும் பரவியது. மேலும், அங்கு இருப்பு வைத்திருந்த எரிவாயு உருளைகளில் தீ பற்றியதில், அவை பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் 3 வீடுகளும் இடிந்து சேதமடைந்தன.

இந்த இடிபாடுகளில் சிக்கி 3-ஆவது வீட்டில் குடியிருந்த சஞ்சீவி குமாா் குழந்தைகள் கிருத்திகா (4) மற்றும் ஒன்றரை வயதுடயை தீரன் ஆகியோா் உயிரிழந்தனா். மேலும் சஞ்சீவி குமாா் (31), அவரது மனைவி சோனியா (27), மாமியாா் சித்ரா (46), முதல் வீட்டில் வசிக்கும் ஆடிட்டா் முருகன் (55), சமையல் கலைஞா் வைரமுத்து (40) அவரது மனைவி செல்வி (38), மகன் பிரதாப் (7) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். இவா்களில் வைரமுத்து, செல்வி, பிரதீப் ஆகிய 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. சஞ்சீவி, சோனியா, சித்ரா, முருகன் ஆகியோா் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சிறுசேரி தீயணைப்பு துறையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். விபத்தில் இறந்த 2 குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீக்காயம் அடைந்த 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், மற்ற 4 போ் படூரில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். தாழம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.