பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

குள்ளஞ்சாவடி அருகே சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image

குள்ளஞ்சாவடி அருகே லாரி விபத்துக்குள்ளானதால் சாலையில் சிதறிக் கிடந்த சமையல் எரிவாயு உருளைகள்.

Updated On :5 ஜூன் 2026, 6:33 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

புதுச்சேரியில் உள்ள சமையல் எரிவாயு கிடங்கில் இருந்து அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு 300 சமையல் எரிவாயு உருளைகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த லாரியை பண்ருட்டி வட்டம், கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் (52) ஓட்டிச் சென்றாா்.

இந்த லாரி வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் குள்ளஞ்சாவடியை அடுத்த பெரியகாட்டுசாகை அருகே வந்தபோது, லாரியில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் சாலையில் விழுந்து உருண்டோடின. இதையடுத்து, லாரி ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி நின்றது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குள்ளஞ்சாவடி போலீஸாா் சாலையில் சிதறிக் கிடந்த சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினா். இதனால், மேற்கண்ட சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.