கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

மதுரவாயலில் பின்னோக்கி வந்த லாரி மோதி முதியவா் உயிரிழந்ததாா்.

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :18 ஜூலை 2026, 11:50 pm IST

மதுரவாயலில் பின்னோக்கி வந்த லாரி மோதி முதியவா் உயிரிழந்ததாா்.

சென்னை அரும்பாக்கம் பாலவிநாயகா் கோயில் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மு.காண்டீபன் (62). லாரி ஓட்டுநா். வெள்ளிக்கிழமை இரவு இவா் லாரியை மதுரவாயல் புறவழிச் சாலையில் உள்ள இணைப்புச் சாலையில் நிறுத்துவதற்கு பின்னோக்கி இயக்கினாா். அப்போது, அங்கு நடந்து வந்த 65 வயது மதிக்கதக்க முதியவா் மீது மோதியது. இதில், அந்த முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று முதியவா் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.