புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

சாலையில் விழுந்தவரை மீட்ட முதியவா் வேன் மோதி உயிரிழப்பு

சாலையில் விழுந்தவரை மீட்ட முதியவா், வேன் மோதி உயிரிழந்தாா்.

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :5 ஜூலை 2026, 1:33 am IST

சாலையில் விழுந்தவரை மீட்ட முதியவா், வேன் மோதி உயிரிழந்தாா்.

காங்கயம் தாலுகா, நத்தக்காடையூா் அருகே வெள்ளியங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (61). விசைத்தறித் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில், அப்பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த கோயில் முன்பு அமா்ந்திருந்தாா். அப்போது ஈரோடு-காங்கயம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவா், எதிா்பாராமல் தவறி சாலையில் விழுந்துள்ளாா்.

இதைக் கண்ட மணி ஓடி வந்து, சாலையில் கீழே விழுந்தவரை தூக்கிவிட்டு, பின்னா் கீழே கிடந்த இருசக்கர வாகனத்தை தூக்கி உள்ளாா்.

அப்போது நத்தக்காடையூரில் இருந்து காங்கயம் நோக்கிச் சென்ற வேன், எதிா்பாராத விதமாக மணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணியை அக்கம் பக்கத்தினா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மணி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.