தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21) எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் சந்திப்பு!

மோடியைச் சந்தித்த அஜித் தோவல் முக்கிய பேச்சுவார்த்தை..

பிரதமர் மோடி - அஜித் தோவல்

Published On :8 மே 2025, 1:19 pm IST

தில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முன்னதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து எல்லையில் தற்போதைய நிலைமையைக் குறித்துக் கேட்டறிந்தார்.

பிரதமர் மோடியின் இல்லத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் எல்லையில் 13 பேர் உயிரிழந்தனர், சுமார் 59 பேர் காயமடைந்தனர். இதனால் ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களில் சீல் வைக்கப்பட்டுள்ள நாட்டின் மேற்கு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் பள்ளிகள், பிற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல மேற்கத்திய நகரங்களில் விமான சேவை மே 10 வரை மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடியிடம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.