தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணியளவில் வெளியிட்டார். இதில் வழக்கம்போல் மாணவிகளே முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்ளுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வெளியானது.
இதையடுத்து மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும், தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தேர்வெழுதியோர் மொத்த எண்ணிக்கை : 7,92,494
மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316
மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178
தேர்ச்சி விவரங்கள்:
தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%)
மாணவியர்- 4,05,472 (96.70 %)
மாணவர்கள் -3,47,670 (93.16 %)
தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049
பள்ளிகள் மேலாண்மை வாரியான தேர்ச்சி சதவிகிதம்
அரசுப் பள்ளிகள் – 91.94%
அரசு உதவி பெறும் பள்ளிகள்- 95.71%
தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 98.88%
பள்ளிகள் வகைபாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்
இருபாலர் பள்ளிகள் – 95.30%
பெண்கள் பள்ளிகள் – 96.50%
ஆண்கள் பள்ளிகள் – 90.14%
அரசுப் பள்ளி மாணவர்களில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்
அரியலூர் – 98.32%
ஈரோடு – 96.88%
திருப்பூர் – 95.64%
கன்னியாகுமரி – 95.06%
கடலூர் – 94.99%
அதிகம் தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்
அரியலூர் 98.82%
ஈரோடு 97.98%
திருப்பூர் மாவட்டத்தில் 97.53%
கோயம்புத்தூர் 97.4%
கன்னியாகுமரி 97.01%
பாடவாரியான தேர்ச்சி சதவிகிதம்
அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.99%
வணிகவியல் பாடப்பிரிவுகளில் 92.68%
கலைப் பிரிவுகளில் 82.90%
தொழிற்பாடப் பிரிவுகளில் 84.22%
எந்த பள்ளிகளில் எவ்வளவு தேர்ச்சி
அரசுப் பள்ளிகளில் 91.94% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 95.71% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் 98.88% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
5 ஆண்டுகள் வாரியான தேர்ச்சி விகிதம்
2021:
தேர்வெழுதிய மாணவர்கள்: 8,16,473
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 8,16,473
தேர்ச்சி விகிதம்: 100%
2022
தேர்வெழுதிய மாணவர்கள்: 8,06,277
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,55,988
தேர்ச்சி விகிதம்: 93.76%
2023
தேர்வெழுதிய மாணவர்கள்: 8,03,385
தேர்ச்சிபெற்ற மாணவர்கள்: 7,55,451
தேர்ச்சி விகிதம் : 94.03%
2024
தேர்வெழுதிய மாணவர்கள்: 7,60,606
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,19,196
தேர்ச்சி விகிதம்: 94.56%
2025
தேர்வெழுதிய மாணவர்கள்: 7,92,494
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 7,53,142
தேர்ச்சி விகிதம்: 95.03%
100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை
கடந்த ஆண்டு - 2,478
இந்த ஆண்டு - 2,638
100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை
கடந்த ஆண்டு - 397
இந்த ஆண்டு - 436
தனித்தேர்வர்கள் தேர்ச்சி விவரம்
பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,019 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 7,466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோன்று தேர்வு எழுதிய 140 சிறைவாசி மாணவர்களில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் தேர்வு எழுதிய 16,904 தனித்தேர்வகளில் 5,500 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 7,513
100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 2,638
100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 436
பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.36 சதவிதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 5.16 சதவிகிம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முக்கியப் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி விகிதம்
தமிழ் - 99.15% - 135 பேர்
இயற்பியல் - 99.22% - 1,125 பேர்
வேதியியல் - 98.99% - 3,181
உயிரியல் - 99.15% - 827 பேர்
கணிதம் - 99.16% - 3,022 பேர்
தாவரவியல் - 99.35% - 269 பேர்
விலங்கியல் - 99.51% - 36 பேர்
கணினி அறிவியல் - 99.73% - 9,536 பேர்
வணிகவியல் - 98.36% - 1,624 பேர்
கணக்குப் பதிவியல் 97.36% - 1,240 பேர்
பொருளியல் - 98.17% - 556 பேர்
கணினிப் பயன்பாடுகள் - 99.78% - $,208
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 98.78% - 273 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை - 26,887.
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை - 2,853
துணை தேர்வு எப்போது?
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதோ்வு முடிவுகள் வெளியீடு: இரு மாணவா்கள் முதலிடம்
மேலும் சிறக்க வேண்டும் அரசுப் பள்ளிகள்!
நீட் மறுத்தேர்வில் பங்கேற்காத 2 லட்சம் மாணவர்கள்! காரணம் என்ன?

சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் சரிபார்ப்பு, மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay



