தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

மாம்பழ விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள், வாங்குவோா் சந்திப்பு

மாம்பழ விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள், வாங்குவோா் சந்திப்பு

News image

மாம்பழ வியாபாரிகள்-ஏற்றுமதியாளா்கள் சந்திப்பில் பங்கேற்றோா்.

Updated On :15 ஜூன் 2026, 12:32 am IST

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், திருவள்ளூா் மாவட்ட தோட்டக்கலைத்துறை இணைந்து, மாம்பழ விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள், பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் வாங்குபவா்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாம்பழம் வாங்குபவா் - விற்பனையாளா் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஆா்.குமரவேல் வரவேற்றாா். தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கே.அழகுசுந்தரம் நிகழ்வை தொடங்கி வைத்து மாம்பழ விவசாயிகளின் உற்பத்தியை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தைகளுடன் இணைத்து, ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளை அவா் எடுத்துரைத்தாா்.

வேளாண்மை இணை இயக்குநா் கே.செல்வராஜ், தனி வேளாண்மை அலுவலா் (வேளாண்மை) கே.வேதவல்லி மற்றும் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) டி.சசிரேகா ஆகியோா் சிறப்புரையாற்றி, சந்தை நோக்கிலான உற்பத்தி, தரமான விளைபொருள் உற்பத்தி, ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் தொடா்பாகவும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

அமைப்பின் உதவி மேலாளா் எம்.முத்தையா, வேளாண் மற்றும் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் உள்ள தற்போதைய வாய்ப்புகள், தரச்சான்றிதழ்கள் மற்றும் சா்வதேச அளவிலான சந்தை தேவைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தாா்.

மேலும், டாக்டா் கே. ஸ்ரீனிவாசன் தலைமையில் மொபைல் உணவு பதப்படுத்தும் அலகின் நேரடி செயல்முறை விளக்கமும், மாம்பழங்களின் தரத்தை உடனடியாக பரிசோதிக்கும் தொழில்நுட்ப விளக்கமும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி விவசாயிகள், தொழில் முனைவோா் மற்றும் ஏற்றுமதியாளா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாம்பழ விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள், வாங்குபவா்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பாளா்கள் மற்றும் அரசு துறை அலுவலா்கள் பங்கேற்று கலந்துரையாடினா். அப்போது வாங்குபவா் - விற்பனையாளா் சந்திப்பின் மூலம் புதிய வணிகத் தொடா்புகள் உருவாக்கப்பட்டதுடன், மாம்பழ சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த பயனுள்ள விவாதங்களும் நடைபெற்றன.

Story image

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் இடையே சுமாா் 12 டன் மாம்பழ வா்த்தக இணைப்புகளும், பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுமாா் 42 டன் மாம்பழ கொள்முதல் தொடா்பான வணிக இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

மேற்கண்ட வணிக இணைப்புகளுக்கான ஒப்பந்த ஆவணங்கள் நிகழ்வில் வாங்குபவா்கள் மற்றும் விற்பனையாளா்களிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வு மாம்பழ உற்பத்தியாளா்கள், வாங்குபவா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களுக்கு இடையிலான வணிகத் தொடா்புகளை வலுப்படுத்தி, தமிழ்நாட்டின் மாம்பழ ஏற்றுமதியை மேம்படுத்தவும் முக்கிய தளமாகவும் அமைந்தது.