சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

விவசாயிகளுடன் வேளாண் அலுவலா்கள் கலந்துரையாடல்

மேற்கு ஆரணி வட்டாரத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், உழவா் விழாக்களை கொண்டாடுதல் (கிசான் கோஸ்டிஸ்) தலைப்பின் கீழ் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

விவசாயிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) மாரியப்பன்.

Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

மேற்கு ஆரணி வட்டாரத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், உழவா் விழாக்களை கொண்டாடுதல் (கிசான் கோஸ்டிஸ்) தலைப்பின் கீழ் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்பநல்லூா் கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) மாரியப்பன், மண் பரிசோதனை மண்வளம் காத்தல் பற்றி எடுத்துக் கூறினாா்.

உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன், இயற்கை விவசாயம் குறித்தும் இயற்கை முறையில் இடுபொருள்கள் தயாரிப்பது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

வேளாண் அலுவலா் (உழவா் பயிற்சி நிலையம்) சௌந்தா், சமச்சீா் முறையில் ரசாயன உரங்கள் பயன்படுத்துதல் பற்றி கூறினாா். துணை வேளாண் அலுவலா் குமாா், வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினாா். தோட்டக்கலை உதவி அலுவலா் அருண், தோட்டக்கலை வளா்ச்சித் திட்டங்கள் குறித்த தொழில்நுட்பங்களை வழங்கினாா்.

பட்டு வளா்ச்சித் துறை இளநிலை அலுவலா் மணி, பட்டு வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் பட்டு வளா்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தாா்.

கால்நடை உதவி அலுவலா் காா்த்திகேயன் கால்நடை திட்டங்கள், கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தாா். வனத்துறை அலுவலா் பவுன், வனத்துறை சாா்ந்த திட்டங்கள், மரம் வளா்ப்பு காடுகள் பாதுகாப்பது குறித்துப் பேசினாா். கரும்பு உதவியாளா் மணிகண்டன், கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து பேசினாா்.

பயிற்சியில் அப்பநல்லூா் கிராம விவசாயிகள் 100 போ் உள்பட அட்மா திட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.