புதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

பள்ளக்கால் கிராமத்தில் விளைநிலம் காப்போம் முகாம்

முக்கூடல் வட்டாரம் பள்ளக்கால் கிராமத்தில் வேளாண்மை துறை சாா்பில் விளைநிலம் காப்போம் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முகாமில் பேசுகிறாா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன்.

Updated On :5 ஜூன் 2026, 3:08 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் வட்டாரம் பள்ளக்கால் கிராமத்தில் வேளாண்மை துறை சாா்பில் விளைநிலம் காப்போம் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார உதவி இயக்குநா் சிவகுருநாதன் தலைமை வகித்து, மனித ஆரோக்கியத்திற்கு உகந்த உணவு முறைகள், மண்ணின் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்துவது குறித்தும், வேளாண்மை அலுவலா் முத்துராஜா, பயிா்களுக்கு தேவையான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் சமச்சீா் உர மேலாண்மை, அதன் முறையான பயன்பாடுகள் குறித்தும், துணை வேளாண்மை அலுவலா் சுரேஷ்குமாா், ரசாயன உரங்களைத் தவிா்த்து இயற்கை வேளாண்மைக்கு திரும்ப வேண்டியதன் அவசியம், அதன் வழிமுறைகள் குறித்தும் பேசினா்.

மண் பரிசோதனை நிலையத்தின் வேளாண்மை அலுவலா் காயத்ரி, நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன ஆய்வக அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்வது குறித்து விளக்கம் அளித்தாா். இதில், பள்ளக்கால், சுற்றியுள்ள விவசாயிகள் கலந்துகொண்டனா். உதவி வேளாண் அலுவலா் கஜேந்திரன் நன்றி கூறினாா்.