

பாகிஸ்தான் உடனான போர் நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.
இதேபோன்று மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை இயக்குநரிடமும் போர்ச் சூழல் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார்.
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போர்ச் சூழல் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பதுங்குக் குழிகளில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நடுவானிலேயே இந்திய ராணுவம் அவற்றை தாக்கி அழித்தது.
இதனைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விமானப் படையினரும் ராணுவத்தினரும் எல்லைப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.