

மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் டி.ஆர். பாலு மற்றும் இதர கட்சியினரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, "இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். விவாதிக்க முடியாத சில விஷயங்கள் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்." என்றார்.
கார்கே பேசும்போது, 'மத்திய அரசு கூறியதைக் கேட்டோம். சில ரகசியத் தகவல்களை வெளியே பகிர்ந்துகொள்ள முடியாது என்று கூறினார்கள். நாங்கள் அனைவரும் அரசுக்கு துணை நிற்பதாக கூட்டத்தில் தெரிவித்தோம்' என்றார்.
இதையும் படிக்க | பஞ்சாபில் தாக்குதல்? ஏவுகணை பாகங்கள் கண்டெடுப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.