பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜெய்சால்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

ஜெய்சால்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

மீட்கப்பட்ட பொருள்.

Updated On :9 மே 2025, 10:50 am

DIN

ஜெய்சால்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கோட்வாலி காவல் நிலையப் பகுதியின் கீழ் கிஷன்காட்டின் முன் அமைந்துள்ள ஜோகிஸ் காலனியில் உள்ள நர்சரிக்கு அருகே இந்தப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கோட்வாலி காவல் அதிகாரி பிரேம் தன், அது வெடிகுண்டு போன்ற பொருளாகத் தெரிகிறது எனக் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராணுவத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்ய கிஷன்காட் விரைந்துள்ளனர். அது உயிர்ப்புடன் உள்ளதா அல்லது செயல் இழந்ததா என்பது தெரியவில்லை.

உள்ளூர்வாசியான அர்ஜுன் நாத், அந்தப் பொருளைக் கண்டு உடனடியாக கிஷன்காட் சர்பஞ்ச் பிரதிநிதி கல்யாண் ராமுக்குத் தகவல் கொடுத்தார். அவர் பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறை மற்றும் இந்திய விமானப்படையின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்தப் பொருள் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஜெய்சால்மரில் பாகிஸ்தானால் ஏவப்பட்ட ட்ரோனின் பாகங்களுடன் ஒத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.