

ஸ்ரீநகரில் மீண்டும் வெடி சப்தம் கேட்பதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், போர் நிறுத்தம் என்ன ஆனது?. ஸ்ரீநகர் முழுவதும் வெடி சப்தம் கேட்கிறது. இது போர் நிறுத்தம் இல்லை.
ஸ்ரீநகரில் வான் பாதுகாப்பு திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு வெளியான நிலையில் வெடி சப்தம் கேட்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே இந்திய எல்லையில் 11 இடங்களில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் பாகிஸ்தான் தாக்கினால் எதிர்த் தாக்குதல் நடத்த எல்லைப் பாதுகாப்பு படைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.