பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மீண்டும் படப்பிடிப்பில் ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளதைப் பற்றி...

ஓ.ஜி. திரைப்படத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

Published On :

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட நடிகர் பவன் கல்யாண், தனது அரசு அலுவல்கள் காரணமாக படப்பிடிப்புகளுக்கு நீண்ட விடுமுறை அளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஹைதரபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் ஈடுபட்டுள்ளதாக அவரது புதிய படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் ‘தே கால் ஹிம் ஓஜி’ (எ) ’ஓஜி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்கின்றார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மும்பைக்குத் திரும்பும் தாதாவின் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத், தடேபள்ளி மற்றும் மும்பை நகரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதில், பவன் கல்யாணின் காட்சிகள் அனைத்தும் வரும் ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் படம் பிடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பானது பவன் கல்யாணின் அரசியல் ஈடுபாட்டினால் தள்ளிப்போனது.

வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.