இந்தியாவில் ஒரே வாரத்தில் 164 ஆக உயர்ந்த கரோனா பாதிப்பு!
ஒரே வாரத்தில் 164 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்தியாவில் ஒரே வாரத்தில் 164 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2020ல் உலகையே புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து இரண்டு வருடங்கள் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கியது. இந்தியப் பொருளாதார நிதிநிலை பெருமளவில் சரிந்தது.
இந்த நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளதையடுத்து, இந்தியாவில் கரோனா நிலைமையைச் சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவும் கோவிட்-19இன் புதிய ஓமிக்ரான் துணை மாறுபாடான ஜெஎன் 1 வகை என்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் (DGHS) தலைமையில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC), அவசர மருத்துவ நிவாரண (EMR) பிரிவு, பேரிடர் மேலாண்மை செல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகள் ஆகிய நிபுணர்களுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
முதற்கட்ட தகவல்களின்படி, கரோனா தொற்று லேசாகப் பதிவாகியுள்ளதாகவும், இறப்பு ஏற்படும் அளவிற்கு தீவிரத்தன்மை இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் தற்போது கரோனா நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் மே 12 முதல் கேரளத்தில் 69 பேருக்கும், மகராஷ்டிரம் மற்றும் தமிழ்நாட்டில் முறையே 44 மற்றும் 34 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் கர்நாடகத்தில் 8 பேருக்கும், குஜராத்தில் 6, தில்லியில் 3, ஹரியாணா, ராஜஸ்தான், சிக்கிமில் தலா ஒருவருக்கும் கரோனா பதிவாகியுள்ளன.
இந்தியாவில் தற்போது 257 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாகவும், இருப்பினும் இந்த பாதிப்பு லேசானவை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கடுமையான சுவாச தொற்று பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு குறித்து நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...