மீண்டும் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

ராகுல் காந்தியின் ஜம்மு - காஷ்மீர் பயணம் குறித்து...
 rahul gandhi
ராகுல் காந்தி (கோப்புப் படம்)PTI
Published on
Updated on
1 min read

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வரும் மே 24 ஆம் தேதி ஜம்முவில் உள்ள பூஞ்ச் மாவட்டத்துக்கு செல்கிறார்.

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ஜம்முவில் உள்ள பூஞ்ச் பகுதிக்கு ராகுல் செல்லவுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏப். 22 ஆம் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு - காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க மே 24 ஆம் தேதி ஜம்முவில் உள்ள பூஞ்ச் பகுதிக்கு ராகுல் காந்தி செல்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நேரிட்டபோது, பாகிஸ்தானிலிருந்து ஷெல் மற்றும் ட்ரோன் தாக்குதல்களின்போது 27 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வீடுகளும் வாழ்வாதாரமாக இருந்த அமைப்புகளும் சேதமடைந்ததால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com